Friday, June 29, 2012

ஒ நெஞ்சமே உயிரே தஞ்சமே

ஆண்:
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே 
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான் 
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான் 
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே 


உயிரிலே உன் பெயரை எழுதினேன் 
அருகிலே இல்லையென்று உருகினேன் 
மலையிலே செம்பருத்தி மலையிலே 
அலைகிறேன் இன்று ஒரு முடிவிலே 
என் அன்பே என்னென்பேன் 
என் ஆசை வீண் என்பேன் 
காதல் மனதின் பாரமே சேரும் கடிதம் கூறுமே 
நாளை விடியும் நேரமே 
நதியில் என் உடல் மிதக்குமே 


பெண்:

ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே 


மனதினை தந்துவிட துடிக்கிறேன் 
விழிகளில் துன்ப மழை வடிக்கிறேன் 
விதியினை வென்றுவிட நினைக்கிறேன் 
நதியிலே உன்னுடனே குதிக்கிறேன் 
என் அன்பே என் நெஞ்சே 
நீ எங்கே நான் அங்கே 
காதல் கணவாய் போவதா 
கானல் நீராய் ஆவதா 


வா வா உயிரே வா 
வாசல் திறந்தேன் வாழ வா 
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே 
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான் 
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான் 
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான் 

இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்

hiiiiiiiiiiiiiiiiii

welcome