Wednesday, July 4, 2012

ஹேய் சின்னங் சின்னங் காட்டுல(Thenmerku Paruvakaatru2010)

ஹேய் சின்னங் சின்னங் காட்டுல
என் கூனாங்குருவி சிக்குமா
வன்னாங்கரட்டில்  பார்த்தது
என் வழியில் வந்து நிக்குமா
மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது
அட முழுசா யாரு பார்த்தது
கள்ள நாட்டுச்சிரிக்கிதான் 
அவ கண்ணா கண்டதும் வேர்த்தது
பேரகேட்க்க நெனச்சேன்
என் புத்து பெரண்டு போச்சு
ஊற கேட்க்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
நீ பகையாளி அம்சமா
இல்ல பங்காளி வம்சமா
சுத்தும் பாம்பாக ஒளியாக  வாடி

சின்னங் சின்னங் காட்டுல
என் கூனாங்குருவி சிக்குமா
வன்னாங்கரட்டில்  பார்த்தது
என் வழியில் வந்து நிக்குமா

நீ வேலி தாண்டி போனாக்கூட
வேர்வை கண்டு புடிப்பேன்
நீ படுதா போட்டு போனா  கூட
பார்வை கண்டு பிடிப்பேன்.........................

வெரட்டி தட்டிய தடத்தே பார்த்தே
வயசெ கண்டு பிடிப்பேன்
ஒரு வைக்கே பொடப்பில்  
ஒளிஞ்சா கூட வைரத்த கண்டு பிடிப்பேன்
அழகில் கலைவாணி
ஒரு அடையாளம் தெரியலையே
மனசெ கலைவாணி
ஒரு துப்பேதும் தொலங்கலையே
ஆண்டிப்பட்டி கனவா
அட அங்கேயும் பார்த்தேன் இல்ல
தாண்டிக்குடிக்கி மேல
நான் தாண்டி பார்க்கவும் இல்ல

ஆடு தின்னும் நரியும் முதலில்
கழுத்ததானா  கவ்வும்
ஆவி தின்னும் அழகு முதலில்
கன்னதானா  கவ்வும்...................

தட்டாம் பூச்சி அடிக்கும்
ரெண்டு கண்ணும் எப்படி மறக்கும்
ஒன்ன நொட்டாங்கையில் 
தோட்டா கூட எட்டாம்னாலும்
ரதியே எங்க தொலைஞ்ச
நெஞ்சு ராவெல்லாம் வாடுதடி
கிளியே எங்க பரந்த
என் கெடையாடும் தேடுதடி
தேனீ ஜில்ல பூராம்
உனை தேடி பார்ப்பேன் வஞ்சி
உன் குடுமி சிக்கின பின்னே
நான் குடிப்பது தாண்டி கஞ்சி 

சின்னங் சின்னங் காட்டுல
என் கூனாங்குருவி சிக்குமா
வன்னாங்கரட்டில்  பார்த்தது
என் வழியில் வந்து நிக்குமா
மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது
அட முழுசா யாரு பார்த்தது
கள்ள நாட்டுச்சிரிக்கிதான் 
அவ கண்ணா கண்டதும் வேர்த்தது
பேரகேட்க்க நெனச்சேன்
என் புத்து பெரண்டு போச்சு
ஊற கேட்க்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
நீ பகையாளி அம்சமா
இல்ல பங்காளி வம்சமா
சுத்தும் பாம்பாக ஒளியாக  வாடி 

No comments:

Post a Comment