Sunday, July 15, 2012

வீசும் வெளிச்சத்திலே... படம்: நான் ஈ பாடலாசிரியார்: கார்கி இசை: மரகதமணி பாடியவர்: கார்த்திக் , சாஹிதி

வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே

கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ..

கொஞ்சம் உளறிக் கொட்டவா?... படம்: நான் ஈ இசை: மரகதமணி பாடியவர்: விஜய் பிரகாஷ்

கொஞ்சம் உளறிக் கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?

கொஞ்சம் வழியை கேட்டேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்

நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.

கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு

கொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய்

ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை
ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை

காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்

இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்
கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா!
ஈருயிரை சேர்க்க வா!
ஒன்றாகிட வா!

நெஞ்சிலே லாவா... படம்: நான் ஈ பாடலாசிரியார்: மதன் கார்கி இசை: மரகதமணி பாடியவர்: ஆச்சு , ஷிவானி

லாவா லாவா லாவா
நெஞ்சிலே லாவா
எரிமலைப் பெண்ணே
இன்னும் அருகில் வா!

ஆங்காங்கே பார்வை மேய
எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா?
ஓ.. வதைத்தாயா?

உன் துளி அழகில்
நான் தொலைந்தேன்
உன் முழு அழகில்
நான் அழிவேன்

ஆனாலும் ஆனாலும்
உன்னை அடைந்திடுவேன்.

படம்: நான் ஈ பாடலாசிரியார்: கார்கி இசை: மரகதமணி பாடியவர்: ஆச்சு , ஷிவானி

நானி என் பேரு
நான் குட்டி ஈ தான் பாரு
அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு
உன் கோட்டைக்குள்ள வாறேன்
உனை வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்கப் போறேன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா!
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!

பொறி என்ன செய்யும்,
காட்டுக்குள்ள விட்டா?
ஒட்டுமொத்தம் சுட்டெரிச்சு
சாம்பலாக்கிடாதா?
துளி என்ன செய்யும்,
தொண்டைக்குள்ள விட்டா?
மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி
உன்னை சாய்ச்சிடாதா?

இந்த அண்டம் கூட தொடங்கும் முன்ன வண்டின் அளவுதான்
ஈன்னு என்ன பாத்தான்
என்ன பூச்சியில சேத்தான்
அங்க தான அவன் தோத்தான்
நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா

நான் உடனடியா செஞ்சு முடிக்க
பத்து விஷயம் கிடக்குது
todo... todo... todo todo...
one உன்ன கொல்லணும்
two உன்ன கொல்லணும்
three உன்ன கொல்லணும்
four உன்ன கொல்லணும்
five உன்ன கொல்லணும்
six உன்ன கொல்லணும்
seven உன்ன கொல்லணும்
eight உன்ன கொல்லணும்
nine உன்ன கொல்லணும்
ten உன்ன கதற கதற கதற கதற
பதற பதற பதற பதற
சிதற சிதற வெட்டி வெட்டி கொல்லணும்

ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா?
உன் செவியோரம் மரண ஓலம்
எட்டிப் பாக்குதா?
ஈயோட காலு கூட
ஈட்டி போல மாறும்
உன கொன்னு தீத்த பின்ன தான்
என் கொலவெறியும் தீரும்

செத்துப் பொழச்சு எமன பாத்து
சிரிச்சவன் நானி!
நெய்யு மேல மொய்க்க
ஈயா நானு? இல்ல
உன் நெஞ்சில் முள்ள தைக்க
பேயா வந்த தொல்ல
உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல அவதரிச்ச வில்லன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!...

Thursday, July 5, 2012

கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே(Thenmerku Paruvakaatru2010)

கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருசே
கைக்கு கெடச்சா பழம் அட வாய்வைக்க வந்து சேருமா
முழுசா கெடச்சிருமா
இல்ல உன் வாயில் முல்லுதைக்குமா
உடல் வெட்டிக்கிட்டு  மெல்ல வெலகுதே
உசூர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே
இது நல்லதுக்க  இல்ல கெட்டதுக்கா
நெஞ்சி போகும் வழி போனா பொழப்பிருக்கா
 கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு.................................

கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருசே
கைக்கு கெடச்சா பழம் அட வாய்வைக்க வந்து சேருமா
முழுசா கெடச்சிருமா
இல்ல உன் வாயில் முல்லுதைக்குமா
உடல் வெட்டிக்கிட்டு  மெல்ல வெலகுதே
உசூர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே
இது நல்லதுக்க  இல்ல கெட்டதுக்கா
நெஞ்சி போகும் வழி போனா பொழப்பிருக்கா
 கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு.................................

நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி உண்டு (Thenmerku Paruvakaatru2010)

நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி உண்டு
நாலுக்கும் ரெண்டுக்கும் இடைவெளி ரெண்டு
காதுல கேட்டதில் பொய்களும் உண்டு
கொளம் வத்திபோனதும் வெளிவரும் நண்டு

கருவேலம் மரத்துக்கு முள்ளே  சொந்தமில்ல
கருவேலம் பட்டையும் பிசினும் இருக்குதுள்ளே
எப்போவும் கெட்டது பூமியில் எதுவுமில்லே
உண்மையக்கண்டதும் வலிக்குது உசுருக்குள்ளே

நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி உண்டு
நாலுக்கும் ரெண்டுக்கும் இடைவெளி ரெண்டு
காதுல கேட்டதில் பொய்களும் உண்டு
கொளம் வத்திபோனதும் வெளிவரும் நண்டு 

Wednesday, July 4, 2012

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா(Thenmerku Paruvakaatru2010)

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
நெஞ்சி நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போடா துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளக்கட்டி அடிக்கிற கன்ன
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா


பெண்:
ஆ.........அத்தமவன் போல வந்து
அங்கே இங்கே மேய்வ
அத்துவானம் காட்டில் விட்டு
அத்து கிட்டு போவ
ஆண்:
முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சி குழி நோக
முட்டை இட்ட காடை எங்க காட்டை  விட்டு போக
பெண்:
கிடையாட்டு கோமியம் கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிருக்கேத்தும் ஆம்பள சொல்லு
மருநாலே மாறிவிடும்
ஆண்:
நான் பொம்பள கிருக்குல வல்ல
என் புத்தியில் வேறொன்னும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லும் மாறுவதில்ல
பெண்:
நீ வெறும் வாய மெல்லாத வெலைய்யாட்டிள்ள
ஆண்:
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
பெண்:
லே லே லே லே லே லே லே லே லே லே லே லே
ஆண்:
ஆண்டிப்பட்டி தாலுக்காவில்
பொம்பளைக்கா  பஞ்சம்
ஆகமொத்தம் ஒன்ன கண்டு
ஆடி போச்சி நெஞ்சம்
பெண்:
பித்தம் கொஞ்சம் கூடி போனா
இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுகூட்ட
சாத்தி வையி கொஞ்சம்
ஆண்:


கொடியோடும் சக்கரைவள்ளி
தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி
அறியாம மனச வைக்கும்
பெண்:
நீ பட்டுன்னு முன்னே வந்து நில்லு
யான் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்ய முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல  பல்லு
ஆண்:
நான் முடி போடா ரெடி தாண்டி
முடிவா சொல்லு...........................


ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
நெஞ்சி நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போடா துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளக்கட்டி அடிக்கிற கன்ன
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா

ஆத்தா அடிக்கையில (Thenmerku Paruvakaatru2010)

ஆத்தா அடிக்கையில
அட அங்கு இங்கு வலிக்களையே
நீ ஓடிவந்து தடுக்கையில
நெஞ்சில் ஒரு கூட பூ கொட்டுதே
சுக்கான் பாறையில 
ஒரு துன்பச்செடி பூத்தது போல்
எதோ மனசுக்குள்ள
ஒரு இலுப்பச தட்டுப்படுதே
யான் கண்ணு முன்னே
நெஞ்சு வெலகுதே
யான் கன்னுவழி உசுர் ஒழுகுதே
இது நல்லதுக்கா இல்ல கேட்டதுக்கா
நெஞ்சு போகும் வழி போன போழப்பிருக்கா

ஹேய் சின்னங் சின்னங் காட்டுல(Thenmerku Paruvakaatru2010)

ஹேய் சின்னங் சின்னங் காட்டுல
என் கூனாங்குருவி சிக்குமா
வன்னாங்கரட்டில்  பார்த்தது
என் வழியில் வந்து நிக்குமா
மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது
அட முழுசா யாரு பார்த்தது
கள்ள நாட்டுச்சிரிக்கிதான் 
அவ கண்ணா கண்டதும் வேர்த்தது
பேரகேட்க்க நெனச்சேன்
என் புத்து பெரண்டு போச்சு
ஊற கேட்க்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
நீ பகையாளி அம்சமா
இல்ல பங்காளி வம்சமா
சுத்தும் பாம்பாக ஒளியாக  வாடி

சின்னங் சின்னங் காட்டுல
என் கூனாங்குருவி சிக்குமா
வன்னாங்கரட்டில்  பார்த்தது
என் வழியில் வந்து நிக்குமா

நீ வேலி தாண்டி போனாக்கூட
வேர்வை கண்டு புடிப்பேன்
நீ படுதா போட்டு போனா  கூட
பார்வை கண்டு பிடிப்பேன்.........................

வெரட்டி தட்டிய தடத்தே பார்த்தே
வயசெ கண்டு பிடிப்பேன்
ஒரு வைக்கே பொடப்பில்  
ஒளிஞ்சா கூட வைரத்த கண்டு பிடிப்பேன்
அழகில் கலைவாணி
ஒரு அடையாளம் தெரியலையே
மனசெ கலைவாணி
ஒரு துப்பேதும் தொலங்கலையே
ஆண்டிப்பட்டி கனவா
அட அங்கேயும் பார்த்தேன் இல்ல
தாண்டிக்குடிக்கி மேல
நான் தாண்டி பார்க்கவும் இல்ல

ஆடு தின்னும் நரியும் முதலில்
கழுத்ததானா  கவ்வும்
ஆவி தின்னும் அழகு முதலில்
கன்னதானா  கவ்வும்...................

தட்டாம் பூச்சி அடிக்கும்
ரெண்டு கண்ணும் எப்படி மறக்கும்
ஒன்ன நொட்டாங்கையில் 
தோட்டா கூட எட்டாம்னாலும்
ரதியே எங்க தொலைஞ்ச
நெஞ்சு ராவெல்லாம் வாடுதடி
கிளியே எங்க பரந்த
என் கெடையாடும் தேடுதடி
தேனீ ஜில்ல பூராம்
உனை தேடி பார்ப்பேன் வஞ்சி
உன் குடுமி சிக்கின பின்னே
நான் குடிப்பது தாண்டி கஞ்சி 

சின்னங் சின்னங் காட்டுல
என் கூனாங்குருவி சிக்குமா
வன்னாங்கரட்டில்  பார்த்தது
என் வழியில் வந்து நிக்குமா
மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது
அட முழுசா யாரு பார்த்தது
கள்ள நாட்டுச்சிரிக்கிதான் 
அவ கண்ணா கண்டதும் வேர்த்தது
பேரகேட்க்க நெனச்சேன்
என் புத்து பெரண்டு போச்சு
ஊற கேட்க்க நெனச்சேன்
என் உசுரு வத்தி போச்சு
நீ பகையாளி அம்சமா
இல்ல பங்காளி வம்சமா
சுத்தும் பாம்பாக ஒளியாக  வாடி 

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே (Thenmerku Paruvakaatru2010)

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எண்டம் புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் 
தாயே ஒதுங்கத்தான் இடமுண்டா
கரட்டுமேட்டையே மாத்துனா
அவ கல்லப்புழுஞ்சி கஞ்சி ஊத்தினா
கரட்டுமேட்டையே மாத்துனா
அவ கல்லப்புழுஞ்சி கஞ்சி ஊத்தினா
கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

உழவுகாட்டுல விதை  விதைப்பா
ஊனாங்கரட்டுல கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை தொடப்பா                                       
பாவமப்பா..........ஒ ..............ஒ..............

வேலி முள்ளில் அவ வெரகெடுப்பா
நாழி அரிசி வச்சி ஒலைஎரிப்பா
பிள்ள உண்ட மிச்சகொங்ண்டு உசுர்வலர்ப்பா
தியாகமப்பா....................

கிழக்கு விடியும் முன்னே முழிக்கிறா
அவ ஓலைக்க பிடிசித்தான் பெறக்குரா   
மன்ன கிண்டித்தான் பொழைக்கிரா               
உடல் மக்கி போகும் மட்டும் ஒழைக்கிரா

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

தங்கம் தனி தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசி இல்ல
தாய் வழி சொந்தம் போல பாசம் இல்ல
நேசமில்ல..............ஒ..................ஒ .................

ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில் இல்லா ஊரில் தாய் இருக்கு
தாய் இல்லா ஊரில் நிழல் இருக்கா
அன்பில் நெசமிருக்கா................

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நெலைக்கிதா
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாய் ரெண்டு தாய் இருக்குதா

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே 

Monday, July 2, 2012

ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம் Nadodi Kadhal 1990

ஏழைமக வீட்டுக்குள்ள
ஏலம்போரையா வந்தவனே 
வாழையடி வாழையன
வளர்ந்து வரும் சந்திரனே
பால்வடியும் பூ முகத்தில்
நீர் வடியக்கூடது
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா
பெத்தமனம் தாங்காது
கண்மணியே கண்மணியே
கண் உறங்கு கண் உறங்கு
ஆயி ..............................

ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்
யாரோ வச்ச தென்ன இது நம்பிருக்குது மன்ன
இது தானாக வளர்ந்த  மரம் பாரம்மா
ஒரு  தாயாரு தந்தையாரு கூரம்மா

ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்
யாரோ வச்ச தென்ன இது நம்பிருக்குது மன்ன
இது தானாக வளர்ந்த  மரம் பாரம்மா
ஒரு  தாயாரு தந்தையாரு கூரம்மா

ஆண்டவனும் நானும் இங்கே அண்ணன் தம்பி கேளு புள்ள
 அவனுக்கும் என்ன போல அப்பா அம்மா யாருமில்ல
ஆண்டவனும் நானும் இங்கே அண்ணன் தம்பி கேளு புள்ள
 அவனுக்கும் என்ன போல அப்பா அம்மா யாருமில்ல

ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா
ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா
இங்கு  ஓட்டை கூரை வீட்க்காரன் சொந்தமெல்லாம் சும்மா
இங்கு  ஓட்டை கூரை வீட்க்காரன் சொந்தமெல்லாம் சும்மா

ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்
யாரோ வச்ச தென்ன இது நம்பிருக்குது மன்ன
இது தானாக வளர்ந்த  மரம் பாரம்மா
ஒரு  தாயாரு தந்தையாரு கூரம்மா

வாலிபத்தின் கடனைதீர்க்க தாலி ஒன்னு அப்பன் தந்தான்
தாலிபட்ட கடனை தீர்க்க தாயார் என்னை பெத்துபுட்டா
வாலிபத்தின் கடனைதீர்க்க தாலி ஒன்னு அப்பன் தந்தான்
தாலிபட்ட கடனை தீர்க்க தாயார் என்னை பெத்துபுட்டா

நம்மை சுமக்கும் பூமியும் ஒருகணக்கு போட்டு இருக்குது
நம்மை சுமக்கும் பூமியும் ஒருகணக்கு போட்டு இருக்குது
நாளை வாங்கும் வரவுக்கு அது  இன்று நம்மை சுமக்குது
நாளை வாங்கும் வரவுக்கு அது  இன்று நம்மை சுமக்குது

ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்
யாரோ வச்ச தென்ன இது நம்பிருக்குது மன்ன
இது தானாக வளர்ந்த  மரம் பாரம்மா
ஒரு  தாயாரு தந்தையாரு கூரம்மா

ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்
யாரோ வச்ச தென்ன இது நம்பிருக்குது மன்ன
இது தானாக வளர்ந்த  மரம் பாரம்மா
ஒரு  தாயாரு தந்தையாரு கூரம்மா

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு Sandhana Kaatru, Year:1990

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

மன்ன விட்டு போனாலென்ன
என்னுடைய்ய மான்தான்
கண்ணைவிட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள்  தான் அழபோப்றேன்
கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

உன்னுடைய பேரை என்றும்
உள்ளத்தில நானே 
பச்சைக்குத்தி வச்சேனம்மா
பட்டுமலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா
உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

எம்பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நியும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

பாடி அழைத்தேன் உன்னை Rasigan Oru Rasigai (1986)

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் .................என் தேவி.................
பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தன்  பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள்
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட  மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் .................என் தேவி.................
பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை

உயிருள்ள ரோஜா பூவே Naan Valartha Poove, Year:1991

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
உயிருள்ள ரோஜா போவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

இதயம் என்ற தோட்டத்திலே
பாசம்  என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே
பரிகொடுப்பெனோ நான்
 துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ
உன் சத்தம் தான் நித்தம்  கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம்  கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க

பித்தனும்  ஆனேனே...........
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ வண்ண மயிலே
தாராயோ தங்கக்கிளியே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

நானும் ஓர் ஏழை அம்மா..............
ஏழை அல்ல என் இதயம்
ஆளையான நானும் கூட
கோழை ஆனேனே
குழந்தையான உன்னால் நானும்
குழந்தையானேனே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே

வந்திடு இல  மானே
நான் தாங்கிட மாட்டேனே
சிரித்தாயோ சின்னக்குயிலே
பிரிவையோ போன்னுரதமே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி

மானே கலை மானே

ஒ..........ஒ..........ஒ............ஒ
மானே கலை மானே
சொந்த வாசகந்தான் எம்பாட்டு
நானே அழுதேனே
அந்த ஞாபகம் தான் பூங்காற்று
செம்மீனே செந்தேனே கண்மூடாதே
எந்நாளும் என் பாடல் கண்ணீரோட
கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம் ஒ ........
கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம்

மானே கலை மானே
சொந்த வாசகந்தான் எம்பாட்டு
நானே அழுதேனே
அந்த ஞாபகம் தான் பூங்காற்று
செம்மீனே செந்தேனே கண்மூடாதே
எந்நாளும் என் பாடல் கண்ணீரோட
கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம் ஒ ........
கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம்

சொல்ல சொல்ல சோகமடி
நான் செல்லரிச்ச புத்தகம்தான்
சொந்த பந்தம் இல்லாம
நான் காயம் பட்ட சித்திரம் தான்
காதலென்னும் கோயில்
காணவில்லை கிளியே அடியே.............
பெண்ணே ...................
நந்தவனம் இங்கே வெந்த பின்னே நீரோ
விழியோரம்  ஈரமென்ன மானே

மானே கலை மானே
சொந்த வாசகந்தான் எம்பாட்டு
நானே அழுதேனே
அந்த ஞாபகம் தான் பூங்காற்று
செம்மீனே செந்தேனே கண்மூடாதே
எந்நாளும் என் பாடல் கண்ணீரோட
கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம் ஒ ........
கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம்

சின்ன சின்ன பூவினிலே
ஒரு சிங்கார மெத்தையிட்டு
வண்ண வண்ண சொல்லெடுத்து........
ஒரு தெம்மாங்கு நான் படிச்சேன்
வாசமல்லி ஏனோ வாடி போச்சி மயிலே அடியே...............
பெண்ணே.........................
ஆச வச்ச தேரோ ஆடி போச்சி தேனே
என் வீட்டில் தீபம் இல்லை மானே

மானே கலை மானே
சொந்த வாசகந்தான் எம்பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம் தான் பூங்காற்று
செம்மீனே செந்தேனே கண்மூடாதே
எந்நாளும் என் பாடல்

கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம் ஒ ........
கிழக்கு வானில் எதோ சோகம் நீதான் காரணம்

மானே கலை மானே
சொந்த வாசகந்தான் எம்பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம் தான் பூங்காற்று

உன்னிடம் மயங்குகிறேன் - Thaen Sindhudhey Vaanam (1975)

உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே

உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே

உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்

பூபாளம்  கேட்க்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்

பூபாளம்  கேட்க்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குரல் ஓசை குயில் ஓசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று

உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்

தேன்சிந்தும் வானம் உண்டு மேகத்தில
நான் சொல்லும் கானம் உண்டு ரகத்திலா

தேன்சிந்தும் வானம் உண்டு மேகத்தில
நான் சொல்லும் கானம் உண்டு ரகத்திலா

கார்காலக்குளிரும் மார்கழி பணியும்
கண்ணே உன் கை சேர தணியும்

கார்காலக்குளிரும் மார்கழி பணியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது

உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்