Wednesday, July 4, 2012

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே (Thenmerku Paruvakaatru2010)

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எண்டம் புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் 
தாயே ஒதுங்கத்தான் இடமுண்டா
கரட்டுமேட்டையே மாத்துனா
அவ கல்லப்புழுஞ்சி கஞ்சி ஊத்தினா
கரட்டுமேட்டையே மாத்துனா
அவ கல்லப்புழுஞ்சி கஞ்சி ஊத்தினா
கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

உழவுகாட்டுல விதை  விதைப்பா
ஊனாங்கரட்டுல கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை தொடப்பா                                       
பாவமப்பா..........ஒ ..............ஒ..............

வேலி முள்ளில் அவ வெரகெடுப்பா
நாழி அரிசி வச்சி ஒலைஎரிப்பா
பிள்ள உண்ட மிச்சகொங்ண்டு உசுர்வலர்ப்பா
தியாகமப்பா....................

கிழக்கு விடியும் முன்னே முழிக்கிறா
அவ ஓலைக்க பிடிசித்தான் பெறக்குரா   
மன்ன கிண்டித்தான் பொழைக்கிரா               
உடல் மக்கி போகும் மட்டும் ஒழைக்கிரா

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

தங்கம் தனி தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசி இல்ல
தாய் வழி சொந்தம் போல பாசம் இல்ல
நேசமில்ல..............ஒ..................ஒ .................

ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில் இல்லா ஊரில் தாய் இருக்கு
தாய் இல்லா ஊரில் நிழல் இருக்கா
அன்பில் நெசமிருக்கா................

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நெலைக்கிதா
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாய் ரெண்டு தாய் இருக்குதா

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லொடச்சிவளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொலச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே 

No comments:

Post a Comment